உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தேரோட்டம்

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தேரோட்டம்

திருச்சி:  உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம் நடந்தது.

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.  தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்து வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பின் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தப்படி நிலையை வந்தடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !