உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி சங்கராச்சாரியார் விஜய யாத்திரை

காஞ்சி சங்கராச்சாரியார் விஜய யாத்திரை

சென்னை:விஜய யாத்திரை மேற்கொண்டு வரும் காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சந்திரமவுலீஸ்வரர் பூஜைகள் செய்து, மக்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.
நாடு முழுதும் ஆன்மிகத்தை பரப்பவும், வளர்க்கவும், உலக நன்மைக்காகவும், காஞ்சி மடாதிபதிகள் விஜய யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.அந்த வகையில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மார்ச் 16 முதல், 20ம் தேதி வரை விஜய யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இதில், பொன்பாடி, கடப்பா, ததிபாத்ரி, அனந்தபுரம், சந்துார், ஹோஸ்பெட், ரய்சூர், மெகபூபாநகர், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு யாத்திரை செய்து சந்திரமவுலீஸ்வரர் பூஜைகள் நடத்தி, வழிபாடு நடத்துகிறார்.அதன் ஒரு பகுதியாக, 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை கர்நாடக மாநிலம், ஹோஸ்பெட்டில் ஸ்ரீ வித்யாரண்ய வித்யா பீடத்தில் வசந்த நவராத்திரி பூஜைகள், சுவாசினி பூஜைகள், யாகசாலை ஹோமங்களில் பங்கேற்றார். அங்கு வித்யாரண்ய வித்யாதான உற்சவமும், அத்வைத சபா, தேவபாஷ்ய சபைகளும் நடந்தன.கடந்த 11ம் தேதி ஹனுமந்தஹள்ளியில் ஆலை ஒன்றுக்கு விஜயேந்திரர் பூமிபூஜை நடத்தினார். அதைத் தொடர்ந்து திரிகால பூஜைகள், பூர்ணாஹுதி, ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடந்தது.அன்று மாலை, ஹம்பி விஜயநகரத்தில் உள்ள விருபஷேஸ்வரர் கோவில், வித்யாரண்ய மடத்திற்கு விஜயம் செய்தார். கங்காவதிக்கு விஜயேந்திரர் புறப்பட்டார். வழியில் உள்ள கொப்பல் மாவட்டம், பூத கும்பா கிராஸிஸ் பகுதியில் வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு சென்று தரிசித்தார்.கங்காவதி-ஆனேகுண்டி வழித்தடத்தில் உள்ள ஸ்ரீமடம் முகாமில், விஜயேந்திரர் மக்களுக்கு அருளாசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !