உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடித்தபசு கோலாகலம்!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடித்தபசு கோலாகலம்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, சுவாமி - அம்பாள் மாலை மாற்றுதல் வைபவம் நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, ஸ்படிகலிங்க தரிசனம் நடந்தது. பின், கால பூஜைகளைத் தொடர்ந்து, காலை 6.00 மணிக்கு பர்வதவர்த்தினி அம்பாள், வெள்ளி கமல வாகனத்தில் தபசு கோலத்தில் ராம தீர்த்தம் மண்டகப்படிக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பின், காலை 6.00 மணிக்கு பிறகு, கோவில் நடை மூடப்பட்டது. பகல் 12.00 மணிக்கு, தங்க ரிஷப வாகனத்தில் ராமநாத சுவாமி, பிரியா விடையுடன் ராம தீர்த்தம் மண்டகப்படிக்கு எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து மதியம் 3.30க்கு ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் மாலை மாற்றுதல் வைபவமும், சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. மாலை 5.00 மணிக்கு மேல் கோவில் நடை திறந்து பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !