வாராரு.. வாராரு.. அழகர் வாராரு: பக்தர்கள் வெள்ளத்தில் மதுரை வந்தார் கள்ளழகர்
மதுரை: அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் கோலத்தில் மதுரை நோக்கி புறப்பட்டார் அழகர்.
மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி, நாளை காலை 5:50 முதல் 6:20 மணிக்குள் நடக்கிறது. இதற்காக, நேற்று மாலை 6:45 மணியளவில் அழகர் கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டார். வழிநெடுகிலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை அதிகாலை தமுக்கம்,கருப்பணசாமி கோவில் முன் ஆயிரம்பொன்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளுகிறார் தொடர்ந்து, தங்கக்குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார். இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் தங்கி இருந்து விட்டு, நாளை மறுநாள் காலை ஆற்றில் இறங்குவார். அதனை தொடர்ந்து மதியம் இராமராயர் மண்டகபடியில் தீர்த்த வாரி நிகழ்வு நடைபெறும். பின்னர், ஏப்ரல் 17 அன்று தேனூர் மண்டக படியில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அன்றிரவு இராமராயர் மண்டக படியில் தசாவதார நிகழ்வு உள்ளிட்ட நிகழ்வுகள் முடித்து ஏப்ரல் 19 அன்று பூப்பல்லக்கில் மதுரையில் இருந்து அழகர் கோவிலுக்கு திரும்புவார்.