உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு

காரைக்குடி: காரைக்குடி பகுதியில் உள்ள கோயில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயில். காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயில், மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில், நகரச் சிவன் கோயில், டி.டி.நகர் விநாயகர் கோயில், செக்காலை நகரச் சிவன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் இருந்து சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !