பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :1372 days ago
பழநி: பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பழநி மலைகோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ஏப்.,8 முதல் ஏப்.,17 வரை சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் சப்பரத்தில் சுவாமி புறப்பாடு, சிம்ம, சேஷ வாகனம், மரசப்பரம், அனுமார் வாகனம், தங்க குதிரை வாகனம், ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு நடைபெறும். (ஏப்.,14 ) நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஏப் 16ல் திரு ஆவினன்குடி கோயிலுக்கு பால் குடம் எடுத்தல், தோள்கன்னியில் திருத்தேரேற்றம், திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற உள்ளது. என பத்து நாட்கள் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் நடராஜன் செய்து வருகிறார்.