உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், பொது சேவை, 11:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. மாலை 5:00 மணிக்கு மூலஸ்தானத்தில் பஞ்சாங்கம் வாசித்தலும், தொடர்ந்து 6:00 மணிக்கு தேகளீச பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி வீதி புறப்பாடு நடந்தது. ஜீயர் ஸ்ரீதேகளீச ராமானுஜாசாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து மூலவர் உலகளந்த பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !