உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரங்கண் மாரியம்மன் தேரோட்டம்

ஆயிரங்கண் மாரியம்மன் தேரோட்டம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. தேர் திருவிழாவை, மாவட்ட திமுக இளைஞரணி பொறுப்பாளர் ரமேஷ் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, திருநகரம் சாலியர் உறவின்முறை தலைவர் சுந்தரமகாலிங்கம், துணைத்தலைவர் யோகா சுந்தர்ராஜன், நகராட்சி துணைத் தலைவர் பழனிசாமி, நகர செயலாளர் மணி, கவுன்சிலர்கள் இளங்கோவன், ஜோதி ராமலிங்கம், அல்லிராணி சிவசங்கரன், கோவில் நிர்வாகிகள் ஆறுமுகம், தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேரோடும் வீதியில் தேர் ஊர்வலமாக வந்து நிலையை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !