உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிங்க பெருமாளுக்கு வெள்ளிக்கவசம்

லட்சுமி நரசிங்க பெருமாளுக்கு வெள்ளிக்கவசம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள், வெள்ளி கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட நாயக்கனூரில் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. பெருமாளுக்கு, 5 லட்சம் ரூபாய் செலவில் வெள்ளிக்கவசம் செய்யப்பட்டுள்ளது. நேற்று தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி, பெருமாள் புதிதாக செய்யப்பட்ட வெள்ளி கவசத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியையொட்டி, அபிஷேக அலங்காரம், கோவில் வளாகத்தில் திருவீதியுலா ஆகியன நடந்தன. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !