உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்!

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்!

திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் பிறந்த திருநட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று ஆடிப்பூரத் தேரோட்டம் நடந்தது. கடந்த 14ம் தேதி காலை 11 மணிக்கு கொடியேற்றத்திற்கு பின் சவுமியப்பெருமாள் மற்றும் ஆண்டாள் எழுந்தருளினர். மாலையில் காப்புக்கட்டி உற்சவம் துவங்கியது. நேற்று காலை 9.30 மணிக்கு மேல் ஆண்டாளும்,பெருமாளும் தேரில் எழுந்தருளினர். மாலை 4.10 மணிக்கு தேர் வடம் பிடித்தல் துவங்கியது. திரளான பக்தர்கள் கூடி வடம் பிடித்தனர். தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு உற்சவம் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !