உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 140 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரகோசமங்கையில் புதிய தேர் வெள்ளோட்டம்

140 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரகோசமங்கையில் புதிய தேர் வெள்ளோட்டம்

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் 140 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக புதிதாக வடிவமைக்கப்பட்ட தேர், சித்திரை திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் தேரோட்டம் நடைபெற்றது. பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற உத்தரகோசமங்கை மங்களநாத சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா உற்ஸவம் விமரிசையாக நடந்து வருகிறது. உத்தரகோசமங்கை வடக்கு ரத வீதியில் பல்வேறு சிற்ப கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட தேர் பல மாதங்களாக வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. 36 அடி உயரம் கொண்ட தேருக்கு நேற்று காலை 11 மணி அளவில் சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களால் வெள்ளோட்டம் விடப்பட்டு கிழக்கு ரத வீதியில் உள்ள தேரடி மண்டபத்தில் தேர் கொண்டுசென்று நிலைநிறுத்தப்பட்டது. 140 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக புதிய தொழில் நுட்பத்தில் பல்வேறு புராண, இதிகாச சிற்பங்களுடன் இன்று மாலை 4 மணியளவில் உற்ஸவ மூர்த்திகளுடன் தேரோட்டம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர், திருத்தேர் உபயதாரர்களான பெங்களூர் மரகதக் கூத்தன் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !