உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், நேற்று சித்திரை தேரோட்டம் பக்தர்களின் ஹரஹர, சிவசிவ கோஷத்துடன் கோலாகலமாக நடந்தது. இக்கோயிலில் சித்திரை திருவிழா ஏப். 6 கொடி ஏற்றத்துடன் துவங்கி நடந்தது. தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வந்தார்.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை விசாலாட்சி, சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு சந்திரசேகர சுவாமி பிரியாவிடையுடனும், விசாலாட்சி அம்பாள் தனித்தனி தேரில் வலம் வந்தனர். முன்னதாக விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை தேரில் சென்றனர். இதேபோல் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் நடந்தது. இக்கோயில்களில் இன்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !