சின்னாளபட்டி சித்திரை திருவிழா: வெண்பட்டு உடுத்தி குடகனாற்றில் இறங்கினார் அழகர்
சின்னாளபட்டி: மேட்டுப்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா, ஏப். 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏப். 14ல் நடந்தது. இன்று சுந்தரராஜ பெருமாள் வெண்பட்டு உடுத்தி குடகனாற்றில் இறங்கினார். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* சின்னாளபட்டி ராம அழகர் கோயில் சித்திரை திருவிழா, மார்ச் 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் லட்சுமி நாராயணருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இன்று சுவாமி வெண்பட்டு உடுத்தி அசுவ வாகனத்தில், வெள்ளியங்கிரி சஞ்சீவி நதியில் இறங்கினார். சிறப்பு பூஜைகளுடன், எதிர்சேவை நடந்தது. முக்கிய நிகழ்ச்சிகளாக, ஏப். 20ல் மோகினி அவதாரம், ஏப். 21ல் பூப்பல்லக்கு ஊர்வலம் மற்றும் புட்டுத்திருவிழா நடக்க உள்ளது.