சென்னிலை குடி அழகர் ஆற்றில் இறங்கினார்
ADDED :1443 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சென்னல்குடி பெருமாள் கோவில் அழகர் ஆற்றில் இறங்கும் விழா நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் அழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்ச்சி போல், இங்கும் அதே நாளில் அழகர் ஊர்வலமாக வந்து பொட்டில் பட்டி பேச்சியம்மன் கோவில் அருகில் உள்ள ஆற்றங்கரையில் இறங்கி, அங்கிருந்து 2 நாட்கள் தங்கியிருந்து, பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து விட்டு, மீண்டும் சென்னல்குடி கோவிலுக்கு சென்று விடுவார். அக்கம் பக்கம் உள்ள கிராம மக்கள் அழகரை தரிசனம் செய்தனர்.