சோமலிங்க சுவாமி கோயிலில் சித்ரா பவுர்ணமி
ADDED :1307 days ago
கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது பால் இளநீர் பஞ்சாமிர்தம் சந்தனம் உள்பட திரவிய அபிஷேகம் நடந்தது. ஓம்கார விநாயகர், ஓம்கார நந்தி, வாலை சக்தி அம்மன், போகர், முத்தானந்தர், வாலையானந்தர், குண்டலினி சித்தர்களுக்கு, விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில், விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.