உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்தியமங்கலம் ராஜகாளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

சத்தியமங்கலம் ராஜகாளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

செஞ்சி: சத்தியமங்கலம் ராஜகாளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பால் குட ஊர்வலம் நடந்தது.

செஞ்சியை அடுத்த சத்தியமங்கலம் 42 ராஜகாளியம்மன் கோவிலில் சித்ராபவுர்ணமி விழா நடந்தது. அதை முன்னிட்டு நேற்று காலை 4 மணிக்கு கோட்டை ராஜகாளியம்மன் குளத்தில் இருந்து புனித நீர் கொண்டு வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். காலை 9 மணிக்கு வராக நதிக்கரையில் பூங்கரகம் ஜோடித்து, முருகன் கோவிலில் இருந்து பெண்கள் ஊர்வலமாக பால் குடம் எடுத்து வந்தனர். 11 மணிக்கு பால் அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. மாலை 3 மணிக்கு மகா யாகமும், 5 மணிக்கு சாமி கோவில் உலாவும், தீமிதியும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !