பூங்குளத்து அய்யனார் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :1307 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே பூங்குளம் அய்யனார் கோயிலில் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் முடிந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றதால் வருஷாபிஷேகம் பூஜை நடந்தது.இந்நிலையில் காலை 5 மணிக்கு சிவாச்சாரியார் பகவதி குருக்கள் தலைமையில் கணபதி ஹோமம் தொடங்கி, விக்னேஸ்வர பூஜை, முதல்கால சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில் கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபாரதனைகள் நடந்தது.பின்பு மூலவரான அய்யனார் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டது. ராமநாதபுரம், மதுரை அதனை சுற்றியுள்ள வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.