உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சித்திரகுப்தர் பூஜை

பழநியில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சித்திரகுப்தர் பூஜை

பழநி: பழநியில் சித்திரகுப்தர் பூஜை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்றது. பழநியில் ஆவணி மூல வீதியில் உள்ள தனியார் மடத்தில் சித்திரகுப்த பூஜை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அவல் பொரி கடலை வெல்லம் கொய்யா வாழை இளநீர் உள்ளிட்ட பழங்கள், பல்வேறு காய்கறிகள் சித்திரகுப்தருக்கு படைத்து, வாழைமரத்தில் பந்தல் அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த பூஜையில் கலந்து கொள்வோருக்கு குழந்தைப்பேறு, ஆயுள் விருத்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம். கடந்த 80 ஆண்டுகளாக சிவசுப்பிரமணியம் நடத்திவருகிறார். பூஜையில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !