உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டூக மகாமுனிக்கு வரமளித்த பெருமாள்

மண்டூக மகாமுனிக்கு வரமளித்த பெருமாள்

வடமதுரை:  வடமதுரை சவுந்தரரராஜப் பெருமாள் கோயிலில் 72ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நேற்று துவங்கியது. கொரோனா தொற்று பிரச்னையால் கடந்த இரு ஆண்டுகளாக இவ்விழா நடக்கவில்லை. இந்தாண்டு விழாவிற்காக கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்ட பெருமாள் சுவாமி, பால்கேணி சென்று மண்டூக மகாமுனிவருக்கு வரமளித்தார். இதனை தொடர்ந்து வடமதுரை நகருக்குள் சென்று பல்வேறு திருக்கண்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்கண்களில் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நாளை (ஏப்.18) இரவு வரை நடைபெறும். ஏப்.19 காலை சுவாமி சன்னதி திரும்புவார். விழா ஏற்பாட்டினை தக்கார் ஜெயசெல்வம், செயல் அலுவலர் விஜயராகவன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !