உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீசந்தன முருகன் கோவில் திருவிழா சிறப்பாக நடந்தது

ஸ்ரீசந்தன முருகன் கோவில் திருவிழா சிறப்பாக நடந்தது

கூடலூர்: கூடலூர், மரப்பாலம் சீனக்கொல்லி ஸ்ரீ சந்தன முருகன் கோவில் திருவிழா, 15ம் தேதி, அதிகாலை 5:00 மணிக்கு ஹோமம், தொடர்ந்து கொடியேற்றத்துடன் துவங்கியது. நள்ளிரவு புளியம்பாறை ஆற்றில் இருந்து அம்மனை கோவிலுக்கு குடி அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன்தினம், காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. பகல் 12:30 மணிக்கு, புளியம்பாறை ஆற்றில் இருந்து பரவகாவடி ஊர்வலமும், துவங்கி கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். நேற்று, சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, 11:00 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. பிற்பகல் 3:30 மணிக்கு அம்மன் கரகம் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !