சித்திவிநாயகர் பூக்குழி விழா
ADDED :1297 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே எருமப்பட்டி சித்திவிநாயகர் கோவில், சித்திரை விழாவை முன்னிட்டு பூக்குழி உற்சவ விழா நடைபெற்றது. முன்னதாக விரதமிருந்த பக்தர்கள், கோவில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.