சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
ADDED :1300 days ago
உப்பூர்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. முன்னதாக பக்தர்கள் முலவருக்கு, அருகம்புல் மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆரதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.