பழங்குடியினர் கோவில் திருவிழா
ADDED :1297 days ago
பந்தலூர்: பந்தலூர் அருகே படைச்சேரி பழங்குடியினர் கிராமத்தில், பகவதி அம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடந்தது. பழங்குடியின மக்கள் நேர்த்திக் கடனுக்காக, கொண்டுவரப்பட்ட பூஜை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை கொண்டு பூஜை செய்யப்பட்டது. பாரம்பரிய இசையுடன் விழா துவங்கி, சாமியாடிகளிடம் குறி கேட்க்கப்பட்டது. தொடர்ந்து பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. திருவிழா மற்றும் பூஜையில் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.