உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழக கவர்னர் ரவி சுவாமி தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழக கவர்னர் ரவி சுவாமி தரிசனம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் தமிழக கவர்னர் ரவி தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். பொது தீட்சிதர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுத்து தரினத்திற்கு. அழைத்துச் சென்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நேற்று முன்தினம் 17ம் தேதி மாலை 5.30 மணிக்கே தமிழக கவர்னர் ரவி வந்து சேர்ந்தார். கழக விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். அதனைத் தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு கவர்னர் ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக வந்தனர். கோவிலுக்கு வந்த கவர்னருக்கு நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை செலுத்தி மேளதாளத்துடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அதிகாரிகள் சங்கல்பம் செய்ததையடுத்து அவரும் அவரது மனைவியும் சிவகாமசுந்தரி சமேத நடராஜரை சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கி மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அருகிலுள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாளை தரிசனம் செய்து, பின்னர் மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !