சோழவந்தான் கோயில் உற்ஸவ விழா
ADDED :1298 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே பொம்மன்பட்டி காளியம்மன், கருப்பணசாமி, கன்னிமார், முனியாண்டி கோயில் உற்ஸவ விழா நடந்தது. வைகை ஆற்றில் இருந்து அம்மனுக்கு சக்தி கரகம் ஜோடித்து கோயிலுக்கு எடுத்து வந்து வழிபட்டனர். முளைப்பாரி ஊர்வலம், பால்குடம், அக்னிச்சட்டி, அங்கப்பிரதட்சனம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.