ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை உற்சவ வீதியுலா
ADDED :1599 days ago
திருக்கனுார்: வழுதாவூர் ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத உற்சவத்தை யொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.திருக்கனுார் அடுத்த வழுதாவூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆதிலிங்கேஸ்வரர் சுவாமி, செம்மனேரி ஐயனாரப்பன் சுவாமி கோவில் அமைந்துள்ளது.இக்கோவில், 800 ஆண்டுகள் பழமையானது. செஞ்சியை ஆண்ட மன்னர் தேசிங்குராஜா வழிபட்ட பெருமை மிக்கது. சித்திரை மாத முதல் திங்கள் கிழமையை முன்னிட்டு, மகா உற்சவம் நேற்று துவங்கியது. காலை 9:30 மணிக்கு சுவாமி அபிஷேக ஆராதனை, மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் நடந்தது.மாலை 6:00 மணிக்கு குதிரை வலம் வருதல், இரவு 8:00 மணிக்கு மின் அலகாரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.