உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டூர் மாகாளியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

காட்டூர் மாகாளியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

சூலூர்: சூலூர், காட்டூர் மாகாளியம்மன் கோவில் திருவிழா துவங்கியது.

சூலூர் - கலங்கல் ரோட்டில் உள்ள காட்டூர் மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு சித்திரை திருவிழா, நேற்று இரவு சாட்டுதலுடன் துவங்கியது. வரும், 26 ம்தேதி இரவு அக்னி கம்பம்  நடப்படுகிறது. மே 1 ம்தேதி 108 திருவிளக்கு பூஜையும், அம்மனுக்கு அலங்கார பூஜையும் நடக்கிறது. மே 4 ம்தேதி காலை தீர்த்தக் குடம், பால்குடம் எடுத்தலும், அம்மை அழைத்தலும் நடக்கிறது. மாலை,  5:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. மறுநாள் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !