உத்தரகோசமங்கை வராகி கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1609 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு மூலவர் வராகி அம்மன், மங்கை மாகாளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மூலவர் வராகி அம்மன் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் வளாகத்தில் உள்ள அம்மிக்கல்லில் பச்சை விரலி மஞ்சள் அரைத்து ஏராளமான பெண்கள் நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றி கொண்டனர். மாவிளக்கு, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பூஜைகளை அருண் பட்டர் செய்திருந்தார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.