முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் தீச்சட்டி ஊர்வலம்
ADDED :1302 days ago
பந்தலூர்: பந்தலூர் எம்.ஜி.ஆர். நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் கொடி ஏற்றுதல் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து கரகம் பாலித்தல் மற்றும் பத்தாம் நம்பர் ஆற்றங்கரையில் இருந்து தீச்சட்டி ஊர்வலம் மற்றும் காவடி ஊர்வலம் பந்தலூர் பஜார் வழியாக அம்மன் கோவில் வளாகத்தை வந்தடைந்தது. அன்னதான பூஜை மற்றும் தேர் ஊர்வலம் நடத்தப்பட்டது. பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.