உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒட்டம்பட்டு கூத்தாண்டவர் சித்திரை விழா

ஒட்டம்பட்டு கூத்தாண்டவர் சித்திரை விழா

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அடுத்த ஒட்டம்பட்டு ஸ்ரீ ஆதி கூத்தாண்டவர் சுவாமி கோவில் 5ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது.

அரகண்டநல்லூர் அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ ஆதி கூத்தாண்டவர் கோவில் 5ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி இரவு துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட கரகம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தொடர்ந்து அரவான் திருமண கோலத்தில் இந்திர விமானத்தில் திருத்தேர் பவனி நடந்தது. நேற்று முன்தினம் காலை அரவான் யுத்த கோலத்தில் பெரும் தேர்பவனி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடுகளை பலியிட்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். மாலை 5:30 மணிக்கு அரவான் களபலியும், இரவு 10:00 மணிக்கு இந்திர விமானத்தில் சுவாமி காட்டு கோவிலுக்கு புறப்பட்டுச் செல்லும் வைபவம் நடந்தது. விழாவின் நிறைவாக வரும் 26-ம் தேதி மாலை 5:00 மணிக்கு காட்டு கோவிலில் தர்மர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா, நாட்டாமைகள், விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !