திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா துவங்கியது
ADDED :1302 days ago
திருத்தணி : திருத்தணி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அடுத்த, 18 நாட்களுக்கும் உற்சவம் தொடர்ந்து நடைபெறும்.இந்த விழாவில், தினசரி மஹாபாரத சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து நிகழ்ச்சிகள் இடம்பெறும். இதையொட்டி, திரளான பக்தர்கள் காப்பு கட்டி தங்களின் விரதத்தை துவக்கியுள்ளனர்.