முனீஸ்வரர் கோவில் சித்திரை விழா துவக்கம்
ADDED :1380 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் கோட்டை தர்ம முனிஸ்வரர் கோவில், சித்திரை உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் நேற்று துவங்கியது. விழாவின் தொடர்ச்சியாக ஏப்ரல் 27 மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்று, முக்கிய விழாவான பூக்குழி விழா உற்சவ விழா ஏப்ரல் 29 இல் நடைபெறுகிறது. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் விரதம் இருந்து, பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.