உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயிலில் விளக்கு பூஜை

முத்தாலம்மன் கோயிலில் விளக்கு பூஜை

கடலாடி: கடலாடி முத்தாலம்மன் கோயிலில் 108 விளக்கு பூஜை நடந்தது. மூலவர் முத்தாலம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. விளக்கு பூஜை, மாங்கல்ய பூஜை குங்குமார்ச்சனை உள்ளிட்டவைகளில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பூஜகர் கூரியைய்யா பூஜைகளை செய்தார். ஏற்பாடுகளை ராஜேந்திரன், சின்னத்தம்பி, மகேஸ்வரி, சாந்தி மற்றும் நன்குடி வெள்ளாளர் உறவின்முறையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !