வனப்பேச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1300 days ago
தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே முகவூர் தெற்கு தெரு ஹிந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட வனப்பேச்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை தொடர்ந்து முகவூர் பூக்குழி திடலில் இருந்து கோயில் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர். நாளை முதல் தொடர் அன்னதானம் நடந்தது. கொரோனா கால கட்டுப்பாடுகளை அடுத்து பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை முகவூர் தெற்கு தெரு ஹிந்து நாடார் உறவின் முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.