புன்னம் பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
க.பரமத்தி அருகே, புன்னம் பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில், 3ல் கம்பம் நடுதலுடன் திருவிழா தொடங்கியது. தினந்தோறும், பல்லக்கு, காமதேனு, பூ பல்லக்கு ஆகிய வாகனங்களில், சுவாமி வீதி உலா நடந்து வந்தது. கடந்த, 17ல் பொங்கல் வைக்கப்பட்டு, வடிசோறு பூஜை, மாவிளக்கு பூஜை நடந்தது. 18 காலை அக்னிசட்டி, அலகு குத்துதலுடன் ஆற்றங்கரையில் இருந்து புனிதநீர் எடுத்துவந்து, சிறப்பு பூஜை செய்தனர். நேற்று முன்தினம், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதில், அலங்காரம் செய்யப்பட்ட பெரிய மாரியம்மன் தேரை வடம் பிடித்து, பக்தர்கள் இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. நேற்று, கம்பம் கோவில் கிணற்றில் விடப்பட்டு, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது.