நாள் முழுவதும் பஞ்சாமிர்த பிரசாதம் வழங்கும் திட்டம் பழநியில் துவக்கம்
பழநி: பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பஞ்சாமிர்த பிரசாதம் இலவசமாக வழங்கும் திட்டம் இந்து அறநிலை துறை அமைச்சராக காணொளி காட்சி மூலம் துவங்கி வைக்கப்பட்டது.
பழநி மலைக்கோயிலுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் (ஏப்.23) பழநி, மதுரை, மருதமலை,திருவேற்காடு, பண்ணாரி, ஸ்ரீரங்கம், திருசெந்தூர் உள்ளிட்ட 10 கோயில்களில் முதற்கட்டமாக துவங்கி வைக்கப்பட்டது. சென்னை, வடபழநி முருகன் கோவிலில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு துவங்கி வைத்தார். அதன்படி பழநி தரிசனம் முடித்து வந்த பக்தர்களுக்கு இணை ஆணையர் நடராஜன், 40 கிராம் அளவுள்ள பஞ்சாமிர்தத்தை பக்தர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி ஆணையர் செந்தில் குமார் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.