நடனபாதேஸ்வரர் கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய கதிர் விழுந்து சிறப்பு வழிபாடு
ADDED :1285 days ago
நெல்லிக்குப்பம்: கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள அஸ்ததாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவில் சோழ மன்னர்கள் ஆட்சிக்கு முன் கட்டப்பட்டது. சித்திரை மாதத்தில் 4 நாட்கள் மாலை நேரத்தில் சூரிய கதிர்கள் நேரடியாக சிவலிங்கம் மீது விழுந்து ஒளி அபிஷேகம் செய்வது போல் கட்டட அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். நேற்று மாலை நடனபாதேஸ்வரர் சிலை மீது சூரிய கதிர்கள் விழுந்து சிவனுக்கு ஒளி அபிஷேகம் செய்தது. மாலை 5.50 முதல் 6.10 மணி வரை நடந்த நிகழ்ச்சியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வு இன்னும் 3 நாட்கள் நடக்கும்.