ஊட்டியில் கிருஷ்ண பலராமர் தேர் திருவிழா
ADDED :1294 days ago
ஊட்டி: ஊட்டியில், ஸ்ரீ கிருஷ்ண பலராமர், 5ம் ஆண்டு தேர் திருவிழா நடந்தது.ஊட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து துவங்கிய தேர்பவனி ஊர்வலத்தை ஜெயபதாக சுவாமி குருமஹராஜ் துவக்கி வைத்தார். லோயர் பஜார், மெயின்பஜார், காபிஹவுஸ், கமர்சியல் ரோடு வழியாக ஸ்ரீனிவாச பெருமாள் கல்யாண மண்டபம் வந்தடைந்தது. தொடர்ந்து, சிறப்பு உபன்யாசம், மஹாபிரசாதம் நிகழ்ச்சி நடந்தது. எடப்பள்ளி சித்தகிரி சாய்பாபா கோவில் சத்திமாயி, ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.