உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புவனம் ஆற்றில் கழிவுக்கு மத்தியில் தர்ப்பணம்: பக்தர்கள் வேதனை

திருப்புவனம் ஆற்றில் கழிவுக்கு மத்தியில் தர்ப்பணம்: பக்தர்கள் வேதனை

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் கழிவுக்கு மத்தியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியுள்ளதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு அவர்களது நினைவு நாளிலும், அமாவாசை அன்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபடுகின்றனர். தர்ப்பணம் கொடுக்க காசிக்கு அடுத்த புண்ணியதலம் திருப்புவனம் என்பதால் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இங்கு போதிய இடவசதி இல்லாத நிலையில் சுகாதாரமின்றியும் கழிவு நிரம்பியும் காட்சி அளிக்கிறது. பக்தர்கள் வீசிய துணிகள் வைகை ஆறு முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. பக்தர்கள் நீராடும் இடத்தில் கழிவு நீரும் தேங்குவதால் முகம் சுழிக்கின்றனர். பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை, உடைமாற்றும் அறை வசதிகள் செய்துதரபடவில்லை. வாகனம், தர்ப்பண கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வைகை ஆற்றினை சுத்தப்படுத்த அனைத்து துறையினரும் முயற்சிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !