அம்மனுக்கு மாவிளக்கு பூஜை
ADDED :1294 days ago
கிருஷ்ணராயபுரம் அடுத்து, புனவாசிப்பட்டி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 22ல் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று காலை, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் ஆகிய பூஜைகள் நடக்கின்றன. வரும், 26 காலை, திருத்தேர் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.