சதுரகிரி வழிபாடு: ஏப்.28 முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
ADDED :1294 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்காக ஏப்.28 முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.
இக்கோயிலில் தமிழ் மாதம் தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவது வழக்கம். கடந்த சித்திரை வருடப்பிறப்பு முதல் சித்ரா பவரர்ணமி வரை முதலில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மழையின் காரணமாக பக்தர்கள் கோயில் செல்ல வனத்துறை அனுமதி மறுத்திருந்தது. இந்நிலையில் சித்திரை மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்காக ஏப்.28 முதல் மே 1 வரை, தினமும் காலை 7:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.