2 ஆண்டுகளுக்குப் பிறகு கொப்புடைய நாயகி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
ADDED :1294 days ago
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பூச்சொரிதல் விழாவில் பூத்தட்டு எடுத்து அம்மனை வழிபட்டனர்.
காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயில் திருவிழா மிகவும் பழமை வாய்ந்த விழாவாகும். கடந்த 2ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விழாக்கள் ஏதும் நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று பூச்சொரிதல் விழா விமரிசையாக நடந்தது. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கருப்பர் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பூத்தட்டு செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.