மகாசக்தி மாரியம்மன் கோவிலில் பால்குடம் விழா
மேட்டுப்பாளையம்: மகாசக்தி மாரியம்மன் கோவில் விழாவில், அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையம் பங்களாமேட்டில், மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 12ம் ஆண்டு விழா கடந்த, 12ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 19ம் தேதி அக்னிக் கம்பம் நடுதலும், 22ம் தேதி திருவிளக்கு பூஜையும் நடந்தது. 26ம் தேதி அம்மன் அழைப்பும், இன்று காலையில் பால்குடம் எடுத்தலும் நடந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, ஏராளமான பக்தர்கள், பால் குடங்களை காரமடை ரோடு, சிக்ஸ் கார்னர், பத்திரப்பா மண்டபம் ரோடு வழியாக, ஊர்வலமாக மகாசக்தி மாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதையடுத்து அலங்கார பூஜையும், மாவிளக்கு எடுத்தலும் நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மஞ்சள் நீராட்டும், நாளை மறு பூஜையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.