திருப்பரங்குன்றத்தில் பிரதோஷ பூஜை
ADDED :1621 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளி யுள்ள சத்தியகிரீஸ்வரர், கம்பத்தடி மண்டபத்தில் மூஞ்சுறு, மயிலுடன் எழுந்தருளியுள்ள மெஹாநந்திக்கு அபிஷேகம், பூஜை, அலங்காரம் நடந்தது. மலைமேல் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதர், மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான், கோயில் வளாகத்திலுள்ள பசுபதீஸ்வரர், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், திருநகர் சித்தி விநாயகர் கோயில் காசி விசுவநாதர், பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயில் காசி விசுவநாதர், கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் சொக்கநாதருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது.