குஞ்சனம்பட்டி பிச்சை சித்தர் குருபூஜை விழா
ADDED :1272 days ago
கன்னிவாடி: குஞ்சனம்பட்டி அருகே பிச்சை சித்தர் கோயில் குருபூஜை விழாவில், ஏராளமான வெளிமாநில சாதுக்கள் பங்கேற்றனர்.
கன்னிவாடி அருகே குஞ்சனம்பட்டியில் பிரசித்திபெற்ற பிச்சை சித்தர் கோயில் உள்ளது. சுவாமியின் மகாசமாதி தினமான நேற்று, முதலாம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. முன்னதாக, விரதமிருந்த பக்தர்கள், பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். தீர்த்த, பால் கலசத்துடன், யாகசாலை பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருவாசக முற்றோதலுடன் குருபூஜை நடந்தது. மகேஸ்வர பூஜையை தொடர்ந்து, சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம், அன்னதானம் நடந்தது. மும்பை, காசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர்.