உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னானி மாரியம்மன் கோவிலில் மக்கள் நன்மைக்காக சிறப்பு ஹோமம்

பொன்னானி மாரியம்மன் கோவிலில் மக்கள் நன்மைக்காக சிறப்பு ஹோமம்

பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி மாரியம்மன் கோவிலில், கிராம நன்மைக்காக சிறப்பு கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் நடந்த ஹோமத்தில் கோவில் தர்மகர்த்தா மாரிமுத்து தலைமை வகித்தார். அர்ச்சகர்கள் ராஜா, தேவா ஆகியோர் ஹோமத்தை நடத்தினார்கள். இதில் கிராமத்தில் அமைதி நிலவ வேண்டும். நோய் இல்லாமல் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். மழை பெய்து கிராமத்தில் விவசாயம் செழிக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜையில் கோவில் கமிட்டி தலைவர் பிரபாகரன், ஆலோசகர் சேகர் ஆகியோர் தலைமையில் கோவில் கமிட்டியினர் மற்றும் கிராம மக்கள், அர்ச்சகர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !