உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹயக்கிரீவர் ஹோமம், தன்வந்திரி பூஜை

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹயக்கிரீவர் ஹோமம், தன்வந்திரி பூஜை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வி நலன் சிறக்க ஹயக்கிரீவர் ஹோமம் மற்றும் தன்வந்திரி பூஜை நடத்தப்பட்டது.


கள்ளக்குறிச்சி சேவாபாரதி அமைப்பு மற்றும் நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் நடந்த பூஜைக்கு, வடக்கனந்தல் கோவில் தர்மகர்த்தா திருநாராயணன் தலைமை தாங்கினார். நண்பர்கள் சமூக சேவைகள் அறக்கட்டளை தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு டாக்டர் பிரபாவதி மருத்துவ ஆலோசனைகளையும், தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் கல்வி ஆலோசனைகளையும், சமுதாய நல்லிணக்க மாநில பொறுப்பாளர் சுப்ரமணியன் நல்லொழுக்க பண்புகள் குறித்தும் விளக்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமுதாய ஆன்மிக பேரவை தலைவர் ராம்ராஜ், சேவா பாரதி அமைப்பு தலைவர் அரவிந்தன் செய்திருந்தனர்.பூஜையில் பங்கு பெற்ற 400 மாணவர்களுக்கும், பூஜிக்கப்பட்ட பேனா வழங்கப்பட்டது. அனைவருக்கும் வாட் நெக்ஸ்ட் மேற்படிப்பு வழிகாட்டி கையேடும் வழங்கப்பட்டது. நுாலகர் சசிக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !