உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணகி கோயிலில் கும்பாபிஷேகம் முதல்வரிடம் கோரிக்கை

கண்ணகி கோயிலில் கும்பாபிஷேகம் முதல்வரிடம் கோரிக்கை

பெரியகுளம்: மங்கலதேவி கண்ணகி கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் தேசிய செட்டியார்கள் பேரவை, முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு அளித்தனர்.

தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, தேனி மாவட்டத் தலைவர் சுந்தரவடிவேல், தலைமை நிலைய செயலாளர் ரகுபதி ஆகியோர் தேனியில் முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்த மனு: மங்கலதேவி கண்ணகி கோயில் சிதிலமடைந்து கிடக்கிறது இதனை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். தமிழக வனப்பகுதியான பளியங்குடியில் இருந்து கோயில் வரை ரோடு அமைக்க வேண்டும். இசைக்கலைஞர் சீர்காழி கோவிந்தராஜன் இந்தியாவின் முதல் நிதியமைச்சர் சண்முகம், காரைக்குடி அழகப்பா செட்டியார் ஆகியோர்களுக்கு முழு உருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் நீர் ஆதாரத்தை விரிவுபடுத்தி, விவசாய நீர்நிலை மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும். இதில் எங்கள் அமைப்பின் சார்பில் அரசுடன் பங்கெடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !