வீரக்குமாரசுவாமி கோவில் உண்டியலில் 11 லட்சம் பக்தர்கள் காணிக்கை
ADDED :1254 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமார் சுவாமி கோவில் கடந்த 2 மாதத்தில் 11 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக வழங்கி உள்ளனர் 2022 பிப்ரவரி 24 ம் தேதிக்கு பின்னர் நேற்று உண்டில் திறக்கப்பட்டது. மாசி மகாசிவராத்திரி தேர்த்திருவிழா நடந்ததால் 2 மாதத்தில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக 10 லட்சத்து 87 ஆயிரத்து 972 ரூபாய் மற்றும் தங்கம் 30 கிராம் வெள்ளி 75 கிராம் இருந்தது என தெரிவித்தனர். கோவில் வளாகத்தில் பெண்கள் உண்டியலில் விழுந்த காசுகளை எண்ணி கணக்கு பார்த்தனர். இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டது.