உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி ஈஸ்வரன் கோயிலில் மண்டல பூஜை

ஆதி ஈஸ்வரன் கோயிலில் மண்டல பூஜை

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டி ஆதி வடிவுடையாள் சமேத ஆதி ஈஸ்வரன் கோயிலில் ஜடா முனீஸ்வரருக்கு 48ம் நாள் மண்டல பூஜை நடந்தது. கணபதி ஹோமம், யாக வேள்வி துவங்கி சுவாமிக்கு பால், தயிர், நெய் உள்ளிட்ட அபிஷேக, ஆராதனைகளை சிவாச்சாரியார் மணிக்குமார் செய்தார். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பூஜாரி ஆதி முத்துக்குமார் மற்றும் திருப்பணி குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !